எனக்கு விதிவிலக்கு தேவையில்லை. டொனால்ட் டிரம்புக்கு லண்டன் மேயர் அதிரடி பதில்
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் தான் அதிபரானது அமெரிக்காவிற்குள் முஸ்லீம்கள் நுழைய தடை விதிக்கப்படும் என்று சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்தார். ஆனாலும் விதிவிலக்காக லண்டன் மேயர் சாதிக் கான் அவர்களை மட்டும் அமெரிக்காவிற்குள் அனுமதிப்பேன் என்று கூறினார்.
இந்நிலையில் லண்டனின் புதிய மேயராக பொறுப்பேற்றுள்ள சாதிக் கான் டொனால்ட் டிரம்ப்பின் விதிவிலக்கை நிராகரித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது “முஸ்லீம்கள் குறித்து டொனால்ட் டிரம்பின் அறியாமை இருநாடுகளையும் பாதுகாப்பற்ற சூழ்நிலைக்கு தள்ளிவிடும். மையநீரோட்ட முஸ்லிம்களை தனிமைப்படுத்துவது அடிப்படைவாதிகளுக்கு சாதகமாக மாறிவிடும்.
டிரம்பும் அவருடன் இருப்பவர்களும் மேற்கத்திய கலாச்சாரம் மையநீரோட்ட இஸ்லாமை ஏற்றுக்கொள்ளவில்லை என்று நினைக்கிறார்கள். ஆனால் லண்டன் மக்கள் அதை தவறு என்று நிரூபித்துவிட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.