நெடுவாசலுக்காக போராடும் லண்டன் தமிழர்கள்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொழுந்துவிட்டு எரியும் பிரச்சனையாக இருப்பது நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம். இந்த திட்டத்தை செயல்படுத்தினால் பொன் விளையும் பூமி மலடாகும் ஆபத்து இருப்பதாக ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்ச்சி காரணமாக விவசாயிகளும், பொதுமக்களும் நெடுவாசல் பகுதியில் கடந்த 15 தினங்களுக்கும் மேல் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்த போராட்டத்தை மத்திய அரசும், மாநில அரசும் நிறுத்துவதற்கு செய்த முயற்சிகள் வீணாகிய நிலையில் போராட்டம் வலுவடைந்து வருகிறது. அதுமட்டுமின்றி நெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவாக சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் நடந்து வருகின்றது.
இந்நிலையில் நெடுவாசல் போராளிகளுக்கு லண்டனில் உள்ள தமிழர்கள் ஆதரவு அளித்துள்ளனர். லண்டனில் உள்ள முக்கிய பகுதியில் இன்று கூடிய தமிழர்கள் ‘Save Neduvasal’ என்ற பாதகையுடன் ‘கார்ப்ரேட்க்கு சேவையா, சோறு திங்க மாட்டியா’ என்று கோஷம் எழுப்பி தங்கள் எதிர்ப்பினை இந்திய அரசுக்கு தெரிவித்தனர்
கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் போலவே இந்த போராட்டமும் உலகின் கவனத்தை திருப்பியுள்ளது என்பது இதன் மூலம் உறுதியாகின்றது.
https://www.youtube.com/watch?v=8qgfKW1fv5w&feature=youtu.be