லண்டன் விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு. பயணிகள் அதிர்ச்சி
இங்கிலாந்து தலைநகர் லண்டன் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் இருந்து போலந்து நாட்டின் ரிஷிசவ் பகுதிக்கு 262 பயணிகள் மற்றும் 10 விமான பணியாளர்களுடன் பறந்து சென்ற போயிங் 767 என்ற விமானம் நடுவானில் திடீரென்று தொழில்நுட்பகோளாறு காரணமாக பிரச்சனைக்கு உள்ளானது. இந்த விமானத்தில் இருக்கும் ஆக்சிஜன் கருவியும் இயங்காததால் விமானத்தின் உள்ளே ஆக்சிஜனின் அளவும் குறைந்து கொண்டே வந்தது.
இதனால் அதிர்ச்சியில் இருந்த பயணிகளுக்கு அவசர காலத்தில் கொடுக்கப்படும் ஆக்சிஜன் மாஸ்க் வழங்கப்பட்டது. விமானத்திற்கு எந்தவித பிரச்சனையும் ஏற்பட கூடாது என்றும் பயணிகள் அதிர்ச்சியோடு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அதன்பின்னர் ஒருவழியாக நெதர்லாந்து நாட்டில் உள்ள அம்சர்டாம் ஷிபோல் விமான நிலையத்தில் விமானம் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.
இது குறித்து தைவான் ஏர்வேஸ் அதிகாரி ஒருவர் கூறியபோது, ‘கடந்த 19ம் தேதி போயிங் 767-300 என்ற தைவான் ஏர்வேஸ் விமானம் லண்டனிலிருந்து போலந்து சென்றது. இதில் திடீரென்று ஆக்சிஜன் கருவி இயங்காததால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினர். இதன் காரணமாக விமான கேப்டன் விமான போக்குவரத்து கட்டுப்பாடு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து நெதர்லாந்தில் உள்ள அம்சர்டாம் ஷிபோல் விமான நிலையத்திற்கு கொண்டு மாற்றப்பட்டு அங்கு அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனால், விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.