ஒரே பைக்கில் 9 பேர். சீன இளைஞரின் வித்தியாசமான முயற்சி.

bike 2ஒரே பைக்கில் 9 பேர் பயணம் செய்ய முடியுமா? முடியும் என்று நிரூபித்துள்ளார் சீனாவை சேர்ந்த ஒரு இளைஞர். இவர் தன்னுடைய கடின முயற்சியால் 9 பேர் உட்கார்ந்து செல்லும் அளவில் 4.7 மீட்டர் நீளமுள்ள பைக் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

சாதாரன எலக்ட்ரிக் கடை வைத்திருக்கும் இளைஞர் ஒருவர் தயாரித்துள்ள இந்த புதுமையான பைக்கை அந்த பகுதியில் இருப்பவர்கள் மட்டுமின்றி நாட்டின் பல பகுதியில் இருந்தும் வந்து ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

bike 1

இந்த பைக்கில் இரண்டு பேட்டரிகள் வைக்கப்பட்டூள்ளது. 12 மணி நேரம் இந்த பேட்டரியை சார்ஜ் போட்டால் 60 கி.மீ வரை பைக்கில் பயணம் செய்யலாம். இந்த பைக்கை ஓட்ட லைசென்ஸும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய வகை பைக் சந்தை விற்பனைக்கு வருமா? என்பது தெரியவில்லை. ஏனெனில் சீனாவில் உள்ள இடநெருக்கடியான சூழ்நிலையில் இவ்வளவு பெரிய பைக்கை நிறுத்த அதிக இடம் தேவைப்படும் என்பதே காரணம்.

கின்னஸ் ரெக்கார்டுக்காக இன்னும் கொஞ்சம் மெருகூட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது, இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த எலெக்ட்ரிக் பைக்!

Leave a Reply