பாலியல் தொழிலாளர்களுடன் நிர்வாணமாக இருந்த பிரிட்டிஷ் மேலவை துணை சபாநாயகர். அதிர்ச்சி தகவல்
பிரிட்டிஷ் நாட்டின் நாடாளுமன்ற மேலவை துணை சபாநாயகர் சமீபத்தில் பாலியல் தொழில் செய்யும் பெண்களுடன் நிர்வாண நிலையில் காணப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் மேலவை, அதாவது பிரபுக்கள் சபையின் துணைத் தலைவர் பதவி வகிக்கும் செவெல் பிரபு அவர்கள் நிர்வாணமான நிலையில், பாலியல் தொழில் செய்யும் பெண்களுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ லண்டனிலிருந்து வெளியாகும் தி சன் என்ற பத்திரிகை வெளியிட்டது. மேலும் அவர் தடை செய்யப்பட்ட கொக்கெயின் உறிஞ்சுவதையும் அந்த புகைப்படங்கள் உறுதி செய்தது.
நாடாளுமன்றத்தில் பதவியில் இருக்கும் பிரபுக்கள் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், ஒழூங்கீனமாக இருக்கும் அவர் பதவி விலக வேண்டும் என்றும் பலர் வலியுறுத்தி வந்த நிலையில் செவெல் பிரபு தானாகவே முன்வந்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அவரது நடவடிக்கை குறித்து அதிர்ச்சி வெளியிட்டுள்ள பிரிட்டிஷ் நாடாளுமன்ற மேலவையின் சபாநாயகர் டிசோசா சீமாட்டி, செவெல் பிரபுவின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை, இது குறித்து விசாரணை செய்யுமாறு தான் காவல்துறையிடம் கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்.