விழுப்புரம் அருகே சுக்குநூறாய் நொறுங்கிய பெரியார் சிலை: என்ன காரணம்?

லாரி மோதியதால் ஏற்பட்ட விபத்தில் விழுப்புரம் அருகே சுக்குநூறாய் பெரியார் சிலை நொறுங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவில் புதுச்சேரியிலிருந்து புனே சென்ற வடமாநிலத்தை சேர்ந்த லாரி ஒன்று விழுப்புரம் காமராஜர் சாலையில் உள்ள பெரியார் சிலை மீது மோதியதாக தெரிகிறது.

இந்த விபத்தால் பெரியார் சிலை பலத்த சேதம் அடைந்ததாகவும், இதனையடுத்து பெரியார் சிலை லாரியை மோதிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.