கனமழை காரணமாக வாகனம் மற்றும் ஐ.டி., துறை பாதிப்பு

Tamil_News_large_1404047

சென்னையில் பெய்த கனமழை காரணமாக வாகனம் மற்றும் ஐ.டி., துறைக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்தது வாங்கியது. இதனால் நகர் முழுவதும் தண்ணீர் தேங்கியது. இதற்கு ஐ.டி., நிறுவனங்களும் தப்பவில்லை. பல நிறவனங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனையடுத்து ஐ.டி., நிறுவனங்கள் விடுமுறை அளித்தன. பலரை பெங்களூருவுக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்தது. இந்நிலையில், ஐ.டி., துறைக்கு ரூ.400 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடுத்தர ஐ.டி., நிறுவனங்களுக்கு 5 முதல் 10 மில்லியன் டாலர் வரையிலும், பெரிய ஐ.டி., நிறுவனங்களுக்கு 40 முதல் 50 மில்லியன் டாலர் வரையிலும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பஸ் மூலம் பெங்களூருவுக்கு அனுப்பி வைத்ததுடன், கனமழை காரணமாக தொடர்பு கொள்ள முடியாமல் இருந்த ஊழியர்களையும் தொடர்பு கொள்ள முயற்சி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதேபோல், வாகன உற்பத்தி துறைக்கும் மழை காரணமாக ரூ.15 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கனமழை காரணமாக சிறு, குறு, பொறியியல் சுற்றுலா துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

 

Leave a Reply