விவசாயிகளின் தற்கொலைக்கு காதல்தான் காரணம். வேளாண் அமைச்சரின் புதுமையான விளக்கம்

விவசாயிகளின் தற்கொலைக்கு காதல்தான் காரணம். வேளாண் அமைச்சரின் புதுமையான விளக்கம்

agri ministerவறுமையாலும், பயிர்க்கடன்களை கட்ட முடியாத காரணத்தினாலும் அடிக்கடி விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாகவும், அதை மத்திய மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வரும் நிலையில், விவசாயிகளின் தற்கொலைக்கு வறுமை காரணம் அல்ல, காதல்தான் காரணம் என மத்திய வேளாண் துறை அமைச்சர் கூறியுள்ள பதில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இன்று பாராளுமன்ற கூட்டத்தின்போது மாநிலங்களவையில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதற்கு என்ன காரணம்? என்று கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் “தேசிய குற்ற ஆவணங்கள் மைய தகவலின்படி விவசாயிகள் தற்கொலைக்கு குடும்ப பிரச்னைகள், உடல் நலக்குறைவு, வரதட்சணை, காதல் விவகாரங்கள் மற்றும் மலட்டுத்தன்மை போன்றவையே காரணங்களாக தெரியவந்துள்ளன” என தெரிவித்தார்.

 விவசாயிகள் தற்கொலைக்கு கடன் ஒரு பிரச்னை அல்ல என்ற ரீதியில் அவர் தெரித்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவுத்தன. ஐக்கிய ஜனதா தளக் கட்சி தலைவர் கே.சி. தியாகி, அமைச்சரின் இந்த பதிலுக்காக அவருக்கு எதிராக நோட்டீஸ் கொடுக்கப்போவதாக தெரிவித்தார்

Leave a Reply