8 அடி உயர மணமகனுக்கு 5 அடி உயர மணமகள். ஃபேஸ்புக் நட்பு காதலாகியது.

facebook couple 3சுமார் 8 அடி உயரமுள்ள பிரேசில் நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னைவிட 3 அடி உயரம் குறைந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த ஜோடியை பிரேசில் நாட்டு மக்கள் மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

பிரேசில் நட்டை சேர்ந்த ஜோலிசன் பெர்னாடன்ஸ் என்ற 28 வயது வாலிபரின் உயரம் 7 அடி 8அங்குலம். இவர் உலகிலேயே மூன்றாவது உயரமான மனிதர் என்ற புகழை பெற்றவர். இந்நிலையில் ஃபேஸ்புக் மூலம் இவர் ஒரு பெண்ணை காதலித்தார். எவம் மெடிரொஸ் என்ற அவருடைய காதலியின் உயரம் வெறும் ஐந்தடி மட்டுமே. சுமார் 3 அடி உயர வித்தியாசம் இருந்தும் மன ஒற்றுமை இருந்ததால் இருவரும் நேரில் சந்தித்து திருமணம் செய்து கொண்டனர்.

facebook couple 1

தனது காதலி குறித்து ஜோலிசன் கூறியபோது முதன்முறையாக மெடிரோஸை நான் பார்த்தபோது அவருடைய உயரம் எனக்கு ஒரு குறையாக தெரியவில்லை. அவருடைய கள்ளமில்லா மனது என்னை மிகவும் கவர்ந்தது. இருவரும் அடிக்கடி ஃபேஸ்புக் மூலம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம். எங்கள் இருவருக்கும் ஒரே சிந்தனையோட்டம் இருந்ததால் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம்’ என்றார்.

இருவரும் தற்போது பிரேசில் நாட்டில் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வருகின்றனர். இந்த ஜோடியை பிரேசில் நாட்டில் உள்ளவர்கள் மட்டுமின்றி உலகமே ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறது. மேலும் இந்த ஜோடிக்கு பேஸ்புக்கில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

 facebook couple 2   facebook couple 5 facebook couple

Leave a Reply