மாணவர்களின் தற்கொலைக்கு காதல்தான் முக்கிய காரணம். பேராசிரியர் சுவாமிநாதன்

11 மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கு முக்கியக் காரணம் காதல்தான் என்று சென்னை பல்கலைக்கழகத்தின் உளவியல் துறைப் பேராசிரியர் வ.தே.சுவாமிநாதன் கூறினார்.

சென்னை மாநிலக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடந்தது. இதில் சென்னை பல்கலைக் கழகத்தின் உளவியல் துறைப் பேராசிரியர் வ.தே.சுவாமிநாதன் பேசியதாவது:

கல்லூரி படிப்பு, மாணவர்களுக்குப் பொற்காலம். மிகவும் கவனமாக இருக்கவேண்டிய காலமும் இதுதான். மாணவர்கள் ஒருவருக் கொருவர் நட்புடன் பழக வேண்டும். வன்முறையில் ஈடுபடக்கூடாது. தங்களுடைய கஷ்டங்கள், பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் சக மாணவரிடமோ, அப்பா, அம்மாவிடமோ உடனுக்குடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். மனதில் வைத்துக்கொள்ளக் கூடாது.

மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள் வதற்கும், தற்கொலைக்கு முயல்வதற்கும் முக்கிய காரணமாக காதல் உள்ளது. கல்லூரியில் ஏற்படும் காதலால் படிப்பில் கவனம் குறைகிறது. இதனால், மாணவர்கள் திசை மாறிச் செல்கின்றனர். வாழ்க்கையில் காதல் முக்கியம்தான்.

ஆனால், அது எந்த காலகட்டத்தில் வரவேண்டும் என்பது முக்கியம். படித்து முடித்து நல்ல வேலை, நல்ல சம்பளம் என சொந்தக் காலில் நிற்கும்போது காதலிப்பது தவறில்லை.

இவ்வாறு பேராசிரியர் சுவாமிநாதன் பேசினார்.

Leave a Reply