காதலியை தீ வைத்து கொளுத்திய காதலன்: திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம்

காதலியை தீ வைத்து கொளுத்திய காதலன்: திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம்

திருப்பூரில் தன்னை காதலித்த இளம் பெண் ஒருவரை திருமணம் செய்ய வலியுறுத்தி நிலையில் அந்தப் பெண் மறுத்ததால் தீயிட்டுக் கொளுத்தியது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் என்ற பகுதியில் இளைஞர் ஒருவர் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். இந்த நிலையில் தன்னை திருமணம் செய்துகொள்ள அவர் வலியுறுத்தியதாகவும், அதற்கு காதலி மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆத்திரமடைந்த காதலன் காதலி மீது தீ வைத்து கொளுத்தி உள்ளார். 80 சதவீத தீக்காயங்களுடன் தற்போது இளம் பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சற்றுமுன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது