காதலர் தினம்: இந்திய மலர் ஏற்றுமதி வணிகம் அபார வளர்ச்சி.

இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவதை அடுத்து, இந்தியாவில் இருந்து சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

காதலர் தினத்தில் அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுவது கொய் மலர்கள் எனப்படும் ஒருவகை மலர். இந்த வருடம் சுமார் 60 லட்சம் கொய்மலர் பெங்களூர் மற்றும் புனேவில் இருந்து வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இத்தாலி, கிரீஸ், சுவீடன், நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர். இந்த வருடம் ஏற்றுமதியாகியுள்ள மலர்களின் மதிப்பு கடந்த 2011ஆம் ஆண்டில் இருந்து இருமடங்கு என புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

ஜப்பானில் இருந்து ஒவ்வொரு வருடமும் காதலர் தினத்திற்காக ரோஜா மலர்கள் பெருமளவில் ஏற்றுமதியாகும். ஆனால் இவ்வருடம் ஜப்பானில் கடும் பனிப்பொழிவு இருந்ததால் இந்திய ரோஜா மலர்களுக்கு சர்வதேச சந்தையில் கடும் கிராக்கி இருந்தது. தமிழகத்தில் மிக அதிகமாக ரோஜா பயிரிட்டுள்ள ஓசூர் விவசாயிகளுக்கு இவ்வருடம் நல்ல லாபம் கிடைத்துள்ளது. காதலர் தினத்தின் வர்த்தகத்தால் காதலர்களை விட வணிகர்கள் பெரும் உற்சாகத்துடன் உள்ளனர்.

Leave a Reply