காதலர் தினத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் கைது.

இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் இன்று தமிழகம் முழுவதும் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.  சென்னை, கோவை, திருச்சி உள்பட பல நகரங்களில் ஆர்ப்பாட்டம் செய்த அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. காதலர்கள் தங்களுக்குள் தங்கள் அன்பை ஒருவருக்கொருவர் பரிமாறி வருகின்றனர். இந்நிலையில் கோவையில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் திடீரென ஆர்ப்பாட்டம் செய்தனர். காதலர் தினம் என்பது மேற்கத்திய கலாச்சாரம் என்றும், இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது என்ரும் காதலர் தினம் கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

வியாபார நோக்கங்களுக்காக சில நட்சத்திர ஓட்டல்கள், நிறுவனங்கள் காதலர் தினத்தை ஆதரித்து வருவதாகவும், அவர்கள் குற்றம் சாட்டினர்.

Leave a Reply