கன்னியாகுமரி லாட்ஜில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை முயற்சி: திடுக்கிடும் தகவல்
கேரளாவை சேர்ந்த ஆணும் பெண்ணும் கள்ளக்காதலில் ஈடுபட்டு அதன் பின் தற்கொலை முயற்சி செய்ததால் கன்னியாகுமரி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த 38 வயது போஸ் என்பவரும் அதே பகுதியை சேர்ந்த 34 வயது சுப்ரியா என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டதாக தெரிகிறது. போஸ் என்பவருக்கு திருமணமாகி குழந்தை இருப்பதாக தெரிகிறது
இந்த நிலையில் திடீரென கேரளாவில் இருந்து கடந்த 4ஆம் தேதி கன்னியாகுமரி வந்த கள்ளக்காதலர்கள், கணவன்-மனைவி எனக்கூறி லாட்ஜில் தங்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று அவர்கள் தங்கியிருந்த லாட்ஜ் அறை நீண்ட நேரமாக பூட்டப்பட்டு இருந்ததால் சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர்கள் கதவை திறந்து பார்த்த போது இருவரும் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது
உடனடியாக அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் இதில் போஸ் மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.சுப்ரியா உயிருக்கு போராடி வருகிறார் இதுகுறித்து சுப்ரியா வாக்குமூலம் கூறுகையில் தங்களது காதலுக்கு இரண்டு வீட்டிலும் எதிர்ப்பு இருந்ததால் தற்கொலை செய்வதற்காக கன்னியாகுமரி வந்ததாகவும் நள்ளிரவில் விஷம் குடித்ததாகவும் அவர் கூறியுள்ளார் இது குறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்