சிறார் குற்றங்களுக்கான வயது வரம்பு 18ல் இருந்து 16ஆக குறைக்க சட்ட அமைச்சகம் ஒப்புதல்

Maneka Gandhi on rapeசிறுவர்கள் குற்றங்களுக்கான வயது வரம்பை 18 லிருந்து16 ஆக குறைக்கும்,  சிறார் தண்டனை சட்டத் திருத்த வரைவு மசோதாவுக்கு இன்று சட்ட அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இனி 16 வயதுக்கு மேல் உள்ளவர்கள் குற்றம் புரிந்தால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.

சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்ததை ஒட்டி, சட்டத் திருத்த வரைவை மத்திய அரசின் ஒப்புதலுக்கு சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் அனுப்பி உள்ளார்.

கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, மற்றும் பல்வேறு வகையான கடுமையான குற்றங்களில் ஈடுபடும் 16 வயதுக்கு மேற்பட்டவர்களையும் முதிர்ச்சி அடைந்தவர்களாக கருதி விசாரணையை மேற்கொள்ள இந்த சட்டத்திருத்தம் வழிவகை செய்கிறது.. டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு மருத்துவக்கல்லூரி மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரு குற்றவாளி 18வயதுக்கு குறைவானவர் என்பதை காரணம் காட்டி தண்டனையில் இருந்து தப்பியதை தொடர்ந்து ஏற்பட்ட பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர் இந்த சட்ட மசோதா ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இந்த சிறார் சட்ட திருத்த வரவு மசோதாவை நிறைவேற்ற மத்திய அமைச்சர் மேனகா காந்தி தீவிரமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply