சமையல் கேஸ் சிலிண்டருக்கும் ஸ்வைப் மிஷின். ஜனவரி 1 முதல் அமல்

சமையல் கேஸ் சிலிண்டருக்கும் ஸ்வைப் மிஷின். ஜனவரி 1 முதல் அமல்

ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்புக்கு பின்னர் நாடு முழுவதிலும் ரூபாய் நோட்டு பற்றாக்குறை இருந்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு அனைத்து மக்களும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில்  சமையல் கியாஸ் விற்பனையிலும் மின்னணு பரிமாற்றம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வரும் ஜனவரி 1 முதல் சமையல் சிலிண்டர் வாங்குவதற்கு ரொக்கமாக பணத்தை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி கியாஸ் சிலிண்டர் வாங்கி கொள்ளலாம். இதற்காக சிலிண்டர் எடுத்து வரும் ஊழியர்கள் ஸ்வைப் எந்திரத்தையும் உடன் கொண்டு வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் ரொக்க பணத்துக்கு பதிலாக கார்டுகளை பயன்படுத்தி சிலிண்டர் பெறலாம். இதற்கான திட்டத்தை ஜனவரி 1-ந்தேதி முதல் அமல்படுத்த இந்தியன் ஆயில் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply