சிலிண்டர் மானியம் திடீர் ரத்து: ஒவ்வொரு மாதமும் ரூ.4 விலையேற்றம். மத்திய அரசின் அதிரடியால் பொதுமக்கள் அதிர்ச்சி

சிலிண்டர் மானியம் திடீர் ரத்து: ஒவ்வொரு மாதமும் ரூ.4 விலையேற்றம். மத்திய அரசின் அதிரடியால் பொதுமக்கள் அதிர்ச்சி

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியத்தை ஒட்டுமொத்தமாக ரத்துசெய்ய மத்திய அரசு தடாலடியாக முடிவு செய்திருக்கிறது.

மத்திய அரசின் மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர்கள் (14.2 கி.கி.) தற்போது ரூ.477.46க்குக் கிடைக்கிறது (டெல்லியில்). இந்த மானிய விலை சிலிண்டர்கள் ஆண்டு ஒன்றுக்கு 12 மட்டுமே கிடைக்கும். அதற்குப் பின் மானியம் அல்லாத சிலிண்டர்களை ரூ.564க்கு வாங்கிக்கொள்ளலாம்.

மானிய விலை சிலிண்டரை நாடு முழுவதும் 18 கோடியே 11 லட்சம் பேர் பயன்பெற்று வருகின்றனர். விருப்பம் உள்ளவர்கள் தானாக முன்வந்து சிலிண்டர் மானியத்தை விட்டுக்கொடுக்கலாம் என்றும் மத்திய அரசு கூறியிருக்கிறது.

இந்நிலையில், சிலிண்டர்களுக்கான மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. மானியம் ரத்து வரும் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலாக உள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மானியம் ரத்து செய்யப்படுவது மட்டுமின்றி மாதம் தோறும் சிலிண்டர் விலையை ரூ.4 உயர்த்திக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது.

Leave a Reply