மத்தியில் மோடி அரசு பொறுப்பேற்றதும் அறிவிக்கப்பட்ட ரயில்கட்டண உயர்வுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தற்போது சமையல் கேஸ் விலையையும் உயர்த்த இருப்பதாக வந்துள்ள செய்தியால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மத்திய அரசு சமையல் கேஸ் விலையை மாதம் ஒன்றுக்கு ரூ.10 உயர்த்த பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தற்போது ஒவ்வொரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 12 சமையல் கேஸ் சிலிண்டர்களை மானிய விலையான ரூ.414க்கு மத்திய அரசு வழங்கிவருகிறது. மானியவிலையில் சிலிண்டர் கொடுப்பதால் ஏற்படும் நஷ்டத்தை சரிகட்ட மாதந்தோறும் ரு.10 விலையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மொத்தமாக உயர்த்தினால் பெரும் எதிர்ப்பு கிளம்பும் என்பதால் மாதந்தோறும் விலையை ஏற்றும் திட்டம் வர இருக்கின்றது. இந்த விலையேற்றத்தின் மூலம் ரூ.7000 கோடி மத்திய அரசுக்கு வருமானம் கிடைக்கும் என கூறப்படாலும், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும், இரண்டு வருடங்கள் கழித்து சமையல் கேஸ் சிலிண்டரின் விலை ரூ.700ஐ தொட்டுவிடும் என்றும் கூறப்படுகிறது.
இந்த விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.