சர்தார் வல்லபாய் படேலுக்கு ரூ.3000 கோடி செலவில் சிலை வைக்க பிரபல கட்டுமான நிறுவனம் எல் அண்ட் டி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1xCQyl4″ standard=”http://www.youtube.com/v/N03XeODaEho?fs=1″ vars=”ytid=N03XeODaEho&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep2927″ /]அமெரிக்காவில் உள்ள சுதந்திரா தேவி சிலை போன்று மிகவும் பிரமாண்டமாக குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டம் நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் சர்தார் சரோவர் டேமில் இருந்து 3.2 கி.மீ தொலைவில் ‘சாதுபெட்’ என்ற இடத்தில் 182 மீட்டர் உயரத்தில் சர்தார் வல்லபாய் அவர்களுக்கு பிரமாண்ட சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சிலையை அமைக்க பிரபல கட்டுமான நிறுவனம் எல் அண்ட் டி சுமார் 3000 கோடி ரூபாயில் ஒப்பந்தம் செய்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனத்தின் நிர்வாகத் துணைத்தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியன் கூறுகையில், “ஒருமைப்பாட்டு சிலை` யான சர்தார் வல்லபாய் படேல் சிலை மூன்றரை வருடங்களில் கட்டி முடிக்கப்படும்.
இந்த வளாகத்திலேயே பெரிய பூங்கா, ஹோட்டல், மாநாடு மையம், மகிழ்ச்சியுடன் பொழுதுபோக்கும் பூங்கா, ஆராய்ச்சி நிலையம், கலாச்சார பாரம்பரியம் வளர்ந்த விதம் மற்றும் சுதந்திர போரை விளக்கும் வகையில் கண்காட்சி மையம் என பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அமைக்கப்படும். உலகிலேயே உயரமான சிலையாக இது அமையும்” என்றார்.