விடுதலைப்புலிகளின் முன்னாள் தலைவர் கருணா கைது

விடுதலைப்புலிகளின் முன்னாள் தலைவர் கருணா கைது

karuna1விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகி பின்னர் ராசபட்சவுக்கு ஆதரவாக செயல்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதி கருணா அம்மன் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜபக்சே அமைச்சரவையில் அமைச்சராக இருந்தபோது பயன்படுத்திய அரசு வாகனத்தை திருப்பி அளிக்காதது மற்றும் வாகனம் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் கருணா கைது செய்யப்பட்டார்.

ராஜபக்சே ஆட்சியில் அமைச்சராகவும், இலங்கை சுதந்திரக் கட்சியின் துணைத் தலைவராகவும் இருந்த கருணா ஏற்கனவே கடந்த 2007-ஆம் ஆண்டு லண்டனுக்கு வந்த போது அடையாள ஆவண மோசடி குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு, ஒன்பது மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply