கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு மனித வெடிகுண்டு தாக்குதலில் இலங்கை ராணுவ ஜெனரல் தனது மனைவியுடன் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த ஒருவருக்கு கொழும்பு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி இன்று காலை தீர்ப்பு அளித்துள்ளது. ஆனால் தண்டனை கொடுக்கப்பட்ட விடுதலைபுலியின் பெயரை நீதிமன்றம் வெளியிடவில்லை.
இலங்கை மேஜர் ஜெனரலாக பணியாற்றியவர் ஜனக பெரேரா. இவர் கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த போரில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த பல்வேறு தாக்குதல்களில் பங்கேற்று விடுதலைப்புலிகளின் பின்னடைவுக்கு காரணமானவர். . ராணுவத்தில் இருந்து பணி ஓய்வு பெற்ற பின்னர் பெரேரா, பிரபல அரசியல் கட்சி ஒன்றில் சேர்ந்தார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கையின் வடக்கு மத்திய மாகாண தேர்தலில் இவர் போட்டியிட்டார். முதல்வர் பதவிக்கு போட்டியிட்ட ஜனக பெரேரா, தேர்தல் பிரச்சாரத்தின்போது விடுதலைப்புலிகளின் மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளாகி பலியானார். இந்த தாக்குதலில் அவரது மனைவி உள்பட மொத்தம் 28 பேர் கொலை செய்யப்பட்டனர்.
இதுகுறித்த வழக்கு ஒன்று இலங்கையின் அனுராதபுரம் நீதிமன்றத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்நிலையில் அந்த வழக்கில் தொடர்புடைய விடுதலைப்புலி ஒருவருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.