19வது ஓவரில் சொதப்பிய சிஎஸ்கே: 2வது தோல்வி!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 19வது ஓவரில் 25 ரன்கள் கொடுத்து சிஎஸ்கே அணி சொதப்பியதால் தோல்வி அடைந்தது

நேற்று நடைபெற்ற லக்னோ மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கிடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது

இதனையடுத்து 211 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் என்ற இலக்கை எட்டியது

சிஎஸ்கே அணியின் 19-வது ஓவரை வீசிய ஷிவம் டூபேயின் ஓவரில் 25 ரன்கள் விட்டுக் கொடுத்ததே சிஎஸ்கே அணியின் தோல்விக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது