ஒரு கிலோ தக்காளி ரூ.10 மட்டுமே: காங்கிரஸ் கட்சியினர் ஏற்படுத்திய பரபரப்பு

ஒரு கிலோ தக்காளி ரூ.10 மட்டுமே: காங்கிரஸ் கட்சியினர் ஏற்படுத்திய பரபரப்பு

தக்காளி விலை அதிகபட்சமாக் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உத்தரபிரதேசத்தில் கிலோ, 10 ரூபாய்க்கு, காங்கிரஸ் தொண்டர்கள் தக்காளி விற்பனை செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நாடு முழுதும், வருடத்துக்கு 1.8 கோடி டன் தக்காளி உற்பத்தி செய்யப்படுகிறது. தக்காளி உற்பத்தியாகும் மாநிலங்களான, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலத்தில் பல்வேறு காரணத்தால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், தக்காளி விலை, கிலோ, ரு. 100ஐ தாண்டியது.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், பா.ஜ., ஆட்சி செய்யும் உத்தர பிரதேசத்தின் லக்னோவில், சட்டசபை வளாகத்துக்கு வெளியே காங்கிரஸ் தொண்டர்கள், தக்காளி கிலோ, ரூ.10க்கு விற்பனை செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply