உபியில் ஐ.எஸ் தீவிரவாதிகள் ஊடுருவல். என்கவுண்டரில் போட்டு தள்ளிய போலீஸ்
உத்தரபிரதேச மாநிலத்தில் இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில் மாநிலத்தின் சில பகுதிகளில் ஐஎஸ் தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தவுள்ளதாக உளவுத்துறை மூலம் ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஐஎஸ் அமைப்பை சேர்ந்த முக்கிய தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து உ.பி.மாநில ஏ.டி.ஜி., தால்ஜித் சவுத்திரி செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘பயங்கரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கி சூடு முடிவுக்கு வந்துள்ளது. அதில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது உடலை போலீசார் கைப்பற்றினர். முதலில் அவர்கள் தரப்பில் இருந்து தான் இந்த தாக்குதல் துவங்கியது. தீவிரவாதிகளை உயிருடன் பிடிக்க மைக்ரோ கேமிராக்கள பயன்படுத்தப்பட்டது. இருப்பின்ம் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக தீவிரவாதி சுட்டு கொல்லப்பட்டார்
என்கவுண்டர் செய்யப்பட்ட நபர், ஐஎஸ்ஐஎஸ்., தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புள்ள பயங்கரவாதி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவன் தங்கியிருந்த அறை முழுவதும் சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும், அதில் முக்கிய தடயங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் டிஜிபி கூறினார்.