தி நகர் சாலையில் திடீரென முறிந்து விழுந்த மரம்: பரபரப்பு தகவல்
சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான தி.நகரில் எப்போது பொதுமக்களின் அதிக நடமாட்டம் இருக்கும். இந்த நிலையில் தி.நகரின் கண்ணதாசன் சாலையில் உள்ள ஒரு பெரிய மரம் திடீரென முறிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் சாலையில் சென்ற பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பது ஒரு ஆறுதலான விஷயமாக உள்ளது.
மரம் முறிந்து விழுந்ததை நேரில் பார்த்த ஒருவர் கூறியபோது, ‘பல நூறு பட்டாசுகள் ஒன்றாக வெடிக்கும் சத்துடன் பெரிய மரம் விழுந்தது என்றும், இந்த மரம் விழுந்த போது பதற்றத்தை தரும் அளவிற்கு சத்தம் இருந்ததாகவும் கூறினார்.
மரம் விழுந்த போது அருகில் நின்றுகொண்டிருந்த ஒருவர், மரத்தின் கிளைகள் முறியும் சத்தம் கேட்டதால், சுதாரித்துக்கொண்டு வேறு பகுதியை நோக்கி ஓடியதாக தெரிவித்தார்.
மரம் முறிந்து விழுந்த போது, கீழே நின்று கொண்டிருந்த கார் மற்றும் ஆட்டோக்கள் கடுமையாக சேதமடைந்தன. பிறகு, அருகிலிருந்தவர்கள் மரத்தின் கிளைகளை உடைத்து கார் மற்றும் ஆட்டோவை மீட்டனர்.
முறிந்து விழுந்த மரத்திற்கு கீழ் தேநீர் கடை ஒன்று உள்ளது. மேலும், மரத்தின் வேர் நகர கார்ப்பரேஷன் மைதானம் வரை செல்கிறது. ஆனால் நல்ல வேலையாக டீ கடைக்கு எதிர் திசையில் மரம் விழுந்துள்ளது.
சென்னையின் பரபரப்பான தி நகர், கண்ணதாசன் சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை. அதேபோல, பொருட்கள் சேதமும் பெருமளவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.