தைவானில் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று கட்டிடத்தின் மேல் விழுந்த விபத்து ஒன்றினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இரண்டு பைலட்டுக்களூம் சிறுகாயத்துடன் உயிர் தப்பினாலும், கட்டிடம் பலத்த சேதம் அடைந்தது.
நேற்று தைவான் நாட்டில் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒரு ஹெலிகாப்டர் திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென பைலட்டுக்களின் கட்டுப்பாட்டை இழந்து மிக வேகமாக கீழ்நோக்கி வந்தது. நிலைமையின் விபரீதத்தை புரிந்துகொண்ட இரு பைலட்டுக்களும் கடைசி நேரத்தில் பாராசூட் மூலம் குதித்து தப்பிவிட்டனர். கீழ்நோக்கி வேகமாக வந்த ஹெலிகாப்டர் கட்டிடம் ஒன்றின் மேல்மாடியில் பலத்த சத்தத்துடன் விழுந்து நொறுங்கியது.
தகவல் அறிந்து மீட்புப்படையினர் வந்து மீட்பு நடவடிக்கைகளை துரிதமாக செய்தனர். இந்த கட்டிடத்தின் மேல்மாடியில் யாரும் இல்லாததால் யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. ஆயினும் கட்டிடம் பலத்தசேதம் அடைந்தது. இதுகுறித்து வழக்கு பதிவுசெய்து தைவான் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.