உலகம் முழுவதும் தோன்றிய சந்திரகிரகணம். கண்டு ரசித்த பொதுமக்கள்

உலகம் முழுவதும் தோன்றிய சந்திரகிரகணம். கண்டு ரசித்த பொதுமக்கள்

இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நிகழ்ந்த சந்திர கிரகணத்தை சென்னை உள்பட உலகின் பல நகரங்களில் வாழும் மக்கள் கண்டு ரசித்தனர்.

சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சந்திர கிரணம் ஏற்படுகிறது. சூரியனுக்கும், நிலவுக்கும் இடையே‌ பூமி பயணிக்கும்போது, சூரியனில் இருந்து நிலவுக்குச் செல்லும் ஒளியை பூமி தடுப்பதால், குறிப்பிட்ட நேரத்திற்கு நிலா இருளடைந்து காட்சியளிக்கிறது.

கடந்த 2015ஆம் ஆண்டுக்கு பின் நிகழ்ந்த இந்த சந்திர கிரகணம், நேற்றிரவு 10.52 மணிக்கு தொடங்கி 12 மணிக்கும் மேல் நீடித்தது. பூமியின் நிழல் நிலவின் மீது விழத் தொடங்கியதை அடுத்து, வட்ட வடிவில் அழகாக கட்சியளித்த நிலா கீழ்ப்புறத்தில் இருந்து 25 சதவீதம் இருளடைந்து காணப்பட்டது. இதனை வெறும் கண்களாலேயே பார்க்க முடிந்தது என்றபோதிலும் சென்னை பிர்லா கோளரங்கத்திற்கு தொலைநோக்கிகள் மூலம் சந்திர கிரகண நிகழ்வை காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நள்ளிரவிலும் நூற்றுக்கணக்கானோர் இந்த சந்திரகிரகணத்தை பிர்லா கோளரங்கத்தில் பார்த்தனர்.

சென்னை மட்டுமின்றி உலகின் பல நகரங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக தெருவில் நின்றும், மொட்டை மாடியில் நின்றும் இந்த கிரகணத்தை கண்டு ரசித்தனர்

Leave a Reply