ரஜினி கட்சியில் லைகா ராஜூ மகாலிங்கம்
உலகப்புகழ் பெற்ற லைகா நிறுவனத்தின் கிரியேட்டிவ் ஹெட் ஆக பணிபுரிந்து கொண்டிருந்த ராஜூ மகாலிங்கம் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ரஜினி ஆரம்பிக்கவுள்ள அரசியல் கட்சியில் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
லைகா நிறுவனம் தான் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படத்தை தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ரஜினியின் இன்னொரு படமான காலா’ படத்தின் விநியோக உரிமையையும் இந்நிறுவனம் தான் பெற்றுள்ளது.
இந்த நிலையில் ராஜூ மகாலிங்கம் திடீரென பதவியில் இருந்து விலகி ரஜினியுடன் அரசியல் களத்தில் குதிக்கவுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் மட்டுமின்றி இன்னும் பல முக்கிய பிரபலங்கள் ரஜினியின் அரசியல் கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.