TNPL கிரிக்கெட்: ஆல்பர்ட் அணியை எளிதில் வீழ்த்திய லைகா அணி
TNPL கிரிக்கெட் போட்டி தொடரின் நேற்றைய ஆட்டத்தில் லைகா நிறுவனத்தின் லைகா கோவை கிங்ஸ் அணி, ஆல்பர்ட் பேட்ரியாட்ஸ் அணியை மிக எளிதில் வீழ்த்தி தனது வெற்றியை பதிவு செய்தது.
நேற்று சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆல்பர்ட் அணி முதலில் பேட்டிங் செய்து 19.5 ஓவர்களில் வெறும் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த அணியின் 8 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களையே எடுத்தனர்
96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி பேட்டிங் செய்த லைகா அணி, 12.5 ஓவர்களில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 96 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 3 விக்கெட்டுக்களை வீழ்த்திய லைகா அணியின் சிவகுமார் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
TNPL போட்டியின் இன்றைய ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி திருவள்ளூர் வீரன்ஸ் அணியுடன் மோதுகிறது.