கமல்-ரஜினியின் 2ஆம் பாக படங்களை தயாரிக்கும் லைகா நிறுவனம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘2.0’ என்ற பிரமாண்டமான திரைப்படம் கடந்த சில வருடங்களுக்கு முன் வெளியான சூப்பர் ஹிட் படமான ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகம் என்பது அனைவரின் அறிந்ததே. இந்த படத்தை லைகா நிறுவனம் ரூ.350 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு 50% முடிந்துவிட்டதாகவும் அடுத்த வாரம் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
இந்நிலையில் உலக நாயகன் கமல்ஹாசனின் விஸ்வரூபம்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் உரிமையை பெற ஆஸ்கார் ரவிச்சந்திரனிடம் பெற லைகா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளதாகவும் எனவே வரும் தீபாவளி நாளில் இந்த படம் ரிலீஸ் ஆவது உறுதி என்றும் கமல் தரப்பில் கூறப்படுகிறது.
ஒரே நேரத்தில் ரஜினி, கமல் படங்களின் இரண்டாம் பாக படங்களை தயாரித்து வரும் பெருமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளதாகவும், இதுவரை எந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு இந்த வாய்ப்பு கிடைத்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.