கமல்ஹாசனின் மருதநாயகம் படத்துக்கு ரூ.500 கோடி செலவு செய்ய முன்வந்த லைகா
உலக நாயகன் கமல்ஹாசனின் கனவுத்திரைப்படம் ‘மருதநாயகம்’ என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த 1997ஆம் ஆண்டு இங்கிலாந்து ராணி எலிசபெத் முன்னிலையில் தொடங்கப்பட்ட இந்த படம் மிகப்பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் பணப்பிரச்சனை காரணமாக இந்த படம் பாதியில் நிறுத்தப்பட்டது.
தற்போதைய நிலையில் இந்த படத்தை முடிக்க ரூ.500 கோடி வரை பட்ஜெட் ஆகும் என்பதால் இந்த படத்தை மீண்டும் தொடங்க ஒரு பிரபல லண்டன் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கமல் ஒரு பேட்டியில் ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து தயாரிக்க லைகா நிறுவனம் முன்வந்துள்ளது. பாகுபலி’யை விட பிரமாண்டமாக தயாரிக்க லைகா நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக எத்தனை கோடி வேண்டுமானாலும் செலவு செய்ய தயாராக இருப்பதாகவும் லைகா நிறுவனம் கமலிடம் வாக்குறுதி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
எனவே கமல்+ஸ்ருதிஹாசன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ‘மருதநாயகம்’ படத்தை கமல் தொடர்வார் என எதிர்பார்க்கபடுகிறது. விஜய் நடித்த ‘கத்தி’, ‘ரஜினி நடித்து வரும் ‘2.0’ ஆகிய படங்களை அடுத்து கமல் நடிக்கும் ‘மருதநாயகம்’ படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.