பிரபல பாடலாசிரியர் அண்ணாமலை மாரடைப்பால் மரணம்

பிரபல பாடலாசிரியர் அண்ணாமலை மாரடைப்பால் மரணம்

annamalaiகடந்த சில வாரங்களுக்கு கோலிவுட் திரையுலகின் முன்னணி பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்களை கோலிவுட் திரையுலகம் இழந்த நிலையில் நேற்று இன்னுமொரு இளம் பாடலாசிரியரான அண்ணாமலையும் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 49

திரைப்படங்களில் பாடல்கள் எழுதிக்கொண்டே பி.எச்.டி பட்டத்திற்கு படித்து வரும் அண்ணாமலை இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு நெருக்கமானவர். விஜய் நடித்த ‘வேட்டைக்காரன்’ படத்தில் இடம்பெற்ற ‘என் உச்சி மண்டையில’, ‘ஒரு சின்ன தாமரை மற்றும் ‘வேலாயுதம்’ படத்தில் இடம்பெற்ற ரத்தத்தின் ரத்தமே உள்பட சுமார் 100 பாடல்களை எழுதியுள்ளார்.

மறைந்த பாடலாசிரியர் அண்ணாமலைக்கு சுகந்தி என்ற மனைவியும், ரித்விகா என்ற மகளும் உள்ளனர்.

Leave a Reply