இதுவரை கமல் காதலர், இனிமேல் தலைவர்: கவிஞர் சினேகன்

இதுவரை கமல் காதலர், இனிமேல் தலைவர்: கவிஞர் சினேகன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வின்னர் பதவியை நூலிழையில் இழந்த கவிஞர் சினேகன், அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் கமல்ஹாசனின் பக்தனாகவே மாறிவிட்டார். இன்று முதல் அரசியல் பயணம் தொடங்கும் கமல்ஹாசனுடன் பயணிக்கும் கவிஞர் சினேகன் அவரது அரசியல் பாதை குறித்து கூறியதாவது:

கமல் அரசியலில் பிரவிசித்துள்ள இந்த நாள் வாழ்நாளில் மறக்க முடியாதது. தமிழகத்தில் மாற்றம் வராதா என எதிர்பார்த்த மக்களுக்கு ஒரு மாற்றத்தை கொடுக்க கமல் வந்துள்ளதாக பாரிக்கின்றனர்.

இத்தனை நாட்கள் அவர் சினிமாவில் காதலராக பார்த்தோம். தற்போது அவரை தலைவராக பார்க்கின்றனர். ரசிகர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் அவருக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். வேடிக்கை பார்ப்பது வேறு. வியந்து பார்ப்பது வேறு. அப்படி தான் மக்கள் கமலைப் பார்க்கின்றனர் என சினேகன் கூறியுள்ளார்.

Leave a Reply