கருத்து கணிப்புகள் மூலம் சிலர் கனவு காண்கிறார்கள்” ஸ்டாலின் மீது மு.க.அழகிரி தாக்கு

கருத்து கணிப்புகள் மூலம் சிலர் கனவு காண்கிறார்கள்” ஸ்டாலின் மீது மு.க.அழகிரி தாக்கு

azhagiriசமீபத்தில் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் வரும் 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் குறித்து ஒரு கருத்துக்கணிப்பை எடுத்து அதன் முடிவை வெளியிட்டிருந்தது. இந்த கருத்துக்கணிப்பில் மீண்டும் ஜெயலலிதா முதல்வராக வருவார் என்றும் திமுகவின் கருணாநிதியை விட ஸ்டாலினுக்கே அதிக செல்வாக்கு இருப்பதாகவும் வெளியிட்டிருந்தது. இந்த கருத்துக்கணிப்புக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி தற்போது இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த மு.க.அழகிரி அப்போது கூறியதாவது: ”கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலினை முன்னிலைப் படுத்தியதால்தான் தி.மு.க. தோல்வி அடைந்தது. அதேபோல், மீண்டும் ஸ்டாலினை முன்னிறுத்தினால் சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க. படுதோல்வி அடையும். தி.மு.க.வில் கருணாநிதிக்கு மட்டுமே மக்கள் ஆதரவு உண்டு. அவருக்காக மட்டுமே மக்கள் வாக்களிப்பார்கள். கருணாநிதியை விட மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவு அதிகம் என்பதை தி.மு.க. தலைவர்களே ஒப்புக்கொள்வார்களா?

ஸ்டாலினின் உறவினர்களால் கருத்துக் கணிப்பு முடிவுகள் திரித்துக் கூறப்பட்டிருக்கிறது. கருணாநிதியை விட ஸ்டாலினுக்கு ஆதரவு அதிகம் என்பது பொய்யான தகவல்” என்று கூறினார். மேலும் தி.மு.க. என்றால் அது கருணாநிதிதான். அவரை தவிர வேறு யாரும் இல்லை. கருத்து கணிப்புகள் மூலம் சிலர் கனவு காண்கிறார்கள்” என்றும் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்

Leave a Reply