கருணாநிதியுடன் மு.க.அழகிரி திடீர் சந்திப்பு. திருப்பம் ஏற்படுமா?
மருந்துகள் காரணமாக, ஒவ்வாமை ஏற்பட்டு கடந்த இரண்டு நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை , தொண்டர்கள் உள்ளிட்ட திமுகவின் முக்கியஸ்தர்கள் யாரும் அவரை சந்திக்க வேண்டாம் என்று திமுக தலைமை அறிவுறுத்தியிருந்த நிலையில் நேற்று முன்னாள் மத்திய அமைச்சரும் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி, தனது தந்தை கருணாநிதியை நேரில் சந்தித்து, நலம் விசாரித்தார்.
கருணாநிதியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி, ‘தலைவர் கருணாநிதி உடல்நலத்துடன் உள்ளதாகக் கூறினார்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் தாய் தயாளு அம்மாளை மட்டுமே சென்னை வந்து சந்தித்த மு.க.அழகிரி நீண்ட இடைவெளிக்கு பின்னர் சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சந்திப்பின்மூலம் திருப்புமுனை ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்