நான் ஃபேஸ்புக்கில் இல்லை. திமுகவை நான் விமர்சிக்கவும் இல்லை. மு.க.அழகிரி திடீர் பல்டி?

நான் ஃபேஸ்புக்கில் இல்லை. திமுகவை நான் விமர்சிக்கவும் இல்லை. மு.க.அழகிரி திடீர் பல்டி?

azhagiriசமீபத்தில் உறுதியான திமுக-காங்கிரஸ் கூட்டணியை திமுக தலைவரின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி கடுமையாக விமர்சனம் செய்த கருத்து ஒன்று அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் எனக்கு ஃபேஸ்புக் பக்கமே இல்லை என்றும், நான் திமுகவை விமர்சனம் செய்யவில்லை’ என்றும் மு.க.அழகிர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள மறுப்பு அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: “‘இன்று (நேற்று) 17.02.2016 மாலை எனது முகநூல் பக்கத்தில் நான் கருத்துக்களை பதிவு செய்துள்ளதாக வந்த செய்தி முற்றிலும் தவறானது. எனக்கு முகநூல் பக்கம் கிடையாது. நான் அப்படியொரு செய்தி கொடுக்கவில்லை. இந்த செய்தியை முற்றிலும் மறுக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

திமுகவை விமர்சிக்கவில்லை என்று மு,க.அழகிரி கூறுவதில் இருந்து மீண்டும் திமுக தலைமையுடன் மு.க.அழகிரி சமாதானமாகிவிட்டாரா? என்று திமுக தொண்டர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

Leave a Reply