அக்டோபர் 25-ல் அனைத்து கட்சி கூட்டம். மு.க.ஸ்டாலின் அழைப்புக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு தருமா?

அக்டோபர் 25-ல் அனைத்து கட்சி கூட்டம். மு.க.ஸ்டாலின் அழைப்புக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு தருமா?

mk stalinகாவிரி பிரச்சனைக்காக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என தமிழக அரசை எதிர்க்கட்சிகள் பலமுறை வலியுறுத்தியும் அரசின் தரப்பில் இருந்து இந்த கோரிக்கை ஏற்று கொள்ளப்படாததால், இம்முறை திமுக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட முடிவு செய்துள்ளது.

இதன்படி வரும் 25ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. அனைத்துக்கட்சி கூட்டம் தொடர்பான அழைப்பு கடிதத்தை எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான ஸ்டாலின் அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால் திமுக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினால் பாஜக பங்கேற்காது என ஏற்கனவே தமிழிசை செளந்திரராஜன் கூறியுள்ளதால் அக்கட்சி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் என்று திருநாவுக்கரசர் சற்று முன் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் மக்கள் நலக்கூட்டணி உள்பட எந்தெந்த கட்சிகள் கலந்து கொள்ளும் என்ற விபரங்கள் போக போக தெரியும்

Leave a Reply