அதிமுகவின் அணிகளை கட்டப்பஞ்சாயத்து செய்வதுதான் பிரதமர் வேலையா? மு.க.ஸ்டாலின்

அதிமுகவின் அணிகளை கட்டப்பஞ்சாயத்து செய்வதுதான் பிரதமர் வேலையா? மு.க.ஸ்டாலின்

பாரத பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ள நிலையில் இதுகுறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

சற்றூ முன்னர் சென்னை அருகேயுள்ள பள்ளிக்கரணை அருகே ஜல்லடையான்பேட்டையில் குளம் தூர்வாரும் பணி தி.மு.க-வின் சார்பில் நடந்து வரும் பணியை ஆய்வு செய்ய வந்த மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘டெல்லியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியைச் சந்தித்தது முற்றிலும் அரசியல் ரீதியானது. பிரதமர் மோடி அ.தி.மு.க-வின் இரு அணிகளுக்கிடையே கட்டப்பஞ்சாயத்து செய்வதுபோல்தான் செயல்படுகிறார்’ என்று கூறினார்.

மேலும் திமுக-வின் செயல்பாடுகள் குறித்து பேசிய ஸ்டாலின், ‘சென்னையில் நிலவும் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க திமுக-வின் சார்பில் குளங்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. திமுக-விற்கு புகழ் சேர்ந்துவிடும் என்பதால் கட்சியின் செயல்பாடுகளை பிற கட்சிகள் விமர்சனம் செய்கின்றன’ எனக் கூறினார்.

Leave a Reply