விமான நிலையத்தில் பேட்டி கொடுக்க என்றே ஒரு மத்திய அமைச்சர்: மு.க.ஸ்டாலின்

விமான நிலையத்தில் பேட்டி கொடுக்க என்றே ஒரு மத்திய அமைச்சர்: மு.க.ஸ்டாலின்

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்த நாராயணசாமியை விமானநிலையத்தில் பேட்டி கொடுக்கும் அமைச்சர் என எதிர்க்கட்சிகள் கிண்டலாக கூறுவதுண்டு. அவர் தற்போது புதுவையில் முதல்வராக உள்ளார்.

இந்த நிலையில் தற்போதைய பாஜக ஆட்சியில் விமான நிலையத்தில் பேட்டி கொடுக்கும் அமைச்சராக பொன்.ராதாகிருஷ்ணன் இருந்து வருவதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இன்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஒரு நிருபர் திமுக காணாமல் போய்விடும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது குறித்து கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த ஸ்டாலின் ‘யார் காணாமல் போவது என்று மக்கள் முடிவு செய்வார்கள். விமான நிலையங்களில் பேட்டி கொடுப்பதற்கு என்றே ஒரு இணை அமைச்சரை மத்திய அரசு நியமித்துள்ளது. அந்த வகையில் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மிகவும் புகழ் பெற்றவர் என்று மு.க.ஸ்டாலின் கிண்டாக விமர்சனம் செய்துள்ளார்.

Leave a Reply