ஊடகங்களில் செய்தியை பார்த்து ஓடோடி வந்த மு.க.ஸ்டாலின். தீப்பொறி ஆறுமுகம் நெகிழ்ச்சி
பிரபல வார பத்திரிகை ஒன்றுக்கு நேற்று பேட்டியளித்த திமுக மேடை பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம், உடல்நலமில்லாமல் தவித்து வரும் தன்னை கண்டிப்பாக மு.க.ஸ்டாலின் நேரில் வந்து பார்ப்பார் என்று நம்பிக்கை தெரிவித்த நிலையில் அவரது நம்பிக்கை வீண் போகவில்லை.
நேற்று மாலையே ஊடகங்களின் செய்தியை பார்த்து சென்னையில் மதுரை வந்து தீப்பொறி ஆறுமுகத்தை நேரில் உடல்நலம் விசாரித்தார் தளபதி ஸ்டாலின். அதுமட்டுமின்றி அவரது சிகிச்சைக்காக ரூ.1 லட்சத்திற்கான காசோலையையும் அவர் திமுக சார்பில் அளித்தார். இதனால் தீப்பொறு ஆறுமுகம் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
திமுகவு கட்சிக்கக நூற்றுக்கணக்கான மேடையேறிய தீப்பொறி ஆறுமுகம் தற்போது வயிறு மட்டும் கால்கள் வீங்கி நடக்க முடியாமல் படுத்த படுக்கையாகியுள்ளார். அவருக்கு தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர் குணமடைவார் என மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்ரன.