நேரில் அஞ்சலி செலுத்தினார் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வராக இருந்தபோதே மரணம் அடைந்த செல்வி ஜெயலலிதாவுக்கு அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலகினர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சற்று முன்னர் எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அவருடன் திமுக எம்.எல்.ஏக்கள் சிலரும் உடனிருந்தனர்.