மு.க.ஸ்டாலின் குடும்பத்தில் அரசியலுக்கு வரும் அடுத்த நபர் யார்?
தமிழக அரசியல் கட்சிகளில் மிக அதிகமான வாரிசுகளை கொண்ட குடும்பமாக கருணாநிதி குடும்பம் இருந்து வருவது அனைவரும் அறிந்ததே. கருணாநிதி, மு.க.ஸ்டாலின், கனிமொழி, அழகிரி, முரசொலி மாறன், தயாநிதி மாறன், என பலர் பெரிய பதவிகளில் இருந்துள்ளனர். இன்னும் அடுத்த தலைமுறையினர்களும் அரசியலில் குதிக்க ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மு.க.ஸ்டாலின் தன்னுடைய குடும்பத்தில் இருந்து இனிமேல் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று உறுதி கூறியுள்ளார். இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், ‘என்னுடைய மகனாக இருந்தாலும் சரி, என்னுடைய மருமகனாக இருந்தாலும் சரி, என்னுடைய குடும்பத்தில் வேறு யாராக இருந்தாலும் அரசியலுக்கு நிச்சயமாக வர மாட்டார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் கூறியபடியே அவருடைய குடும்பத்தில் இருந்து இனியாரும் அரசியலுக்கு வராவிட்டாலும், அழகிரி, கனிமொழி போன்றவர்களின் குடும்பத்தில் இருந்து அடுத்த தலைமுறையினர் நிச்சயம் அரசியலுக்கு வருவார்கள் என்றே கூறப்படுகிறது.