ஓபிஎஸ் முடிவு குறித்து ஸ்டாலின் கருத்து

ஓபிஎஸ் முடிவு குறித்து ஸ்டாலின் கருத்து

தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் செய்தியாளர்கள்  சந்தித்து மீண்டும் ஒரு புரட்சியை ஏற்படுத்தி பல்வேறு ரகசியங்களை வெளிப்படுத்தினார். இது தமிழக அரசியல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பன்னீர்செல்வம் அதிரடி குறித்து திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

‘முதல்வர் பன்னீர்செல்வத்தை சசிகலா செயல்படவிடாமல் தடுத்துள்ளார். மேலும் தன்னையே மிரட்டி ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து பெறப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். கவர்னர் பதவி பிரமானம் செய்து வைத்த முதல்வருக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.

கவர்னர்  தலையிட்டு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவர்னருக்கு வேண்டுகோள் வைக்கின்றேன். அதேபோல பன்னீர் செல்வம் தலைமையில் அமைந்துள்ள ஆட்சி நடைபெற்ற மக்கள் நல பணிகளை  ஆதரித்தோம். மக்களுக்கு ஆதரவான பணிகளுக்கு எப்போதும் திமுக துணை நிற்கும்

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Leave a Reply