சோபியா சொன்னதை நானும் சொல்வேன்: டுவிட்டரில் ஸ்டாலின் ஆவேசம்
நேற்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்ற போது இளம்பெண் ஒருவர் பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் தமிழிசை செளந்தரராஜன் இதுகுறித்து சோபியா மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் 3 சோபியா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சோபியா சொன்னதை நானும் சொல்வேன் என்று கூறியது மட்டுமின்றி பா.ஜ.கவின் பாசிச ஆட்சி ஒழிக! என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அவர் பதிவு செய்த டுவீட் இதோ:
ஜனநாயக விரோத – கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது! உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்!
அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை இலட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்?
நானும் சொல்கின்றேன்!
“பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக!” https://t.co/JoPajdrSW5
— M.K.Stalin (@mkstalin) September 3, 2018