மு.க.ஸ்டாலின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறவில்லை. திமுக தலைமை விளக்கம்.

mk stallinem.k.stallinநாத்திக கொள்கைகளை கடைபிடித்து வரும் திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் அவர்களின் அதிகாரபூர்வ இணையதளத்தில் அவர் பொதுமக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டதாக வந்த தகவலை அடுத்து திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு திமுக தலைமை தற்போது விளக்கம் கொடுத்துள்ளது. ஸ்டாலின் அவர்களின் அனுமதியின்றி அந்த வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

நேற்று மாலை இதுகுறித்து திமுக தலைமை செய்திக்குறிப்பு ஒன்றை தனது தொண்டர்களுக்கும் ஊடகங்களுக்கும் வெளியிட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பில், “தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினின் பிரத்யேக இணைய தளத்தில், அவர் விநாயகர் சதுர்த்தி நாளன்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த செய்தி, மு.க.ஸ்டாலினின் இணைய தளத்தை பராமரிக்கின்ற சில தோழர்கள் ஆர்வ மிகுதியின் காரணமாக, எல்லோரும் தெரிவித்திருப்பதைப் போல மு.க.ஸ்டாலினும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக வெளியிட்டுள்ளனர். இது மு.க.ஸ்டாலினின் முன் அனுமதியின்றி நடைபெற்ற செயலாகும். இந்த வாழ்த்துச் செய்தி அவரது விருப்பப்படியானது இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மதத்தினர்களின் ரம்ஜான், கிறிஸ்துவ மதத்தினர்களின் கிறிஸ்துமஸ் போன்ற நாட்களில் வாழ்த்து தெரிவிக்கும் திமுக தலைமை இந்து பண்டிகை நாட்களுக்கு மட்டும் வாழ்த்து தெரிவிக்க மறுப்பது ஏன்? என்று இணையதளங்களில் பலர் திமுகவுக்கு கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு திமுக தலைமை பதிலேதும் இதுவரை கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply