ஆம் ஆத்மி கட்சியில் இருந்த முக்கிய பெண் தலைவர் நேற்று திடீரென அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
டெல்லியில் நடந்த ஆம் ஆத்மி கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் பெண் தலைவர் மது பாதுரி பேசிய கருத்துக்கு வெளிப்படையாகவே கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த மது பாதுரி ‘ஆம் ஆத்மி கட்சியில் பெண்களுக்கு மரியாதை இல்லை என்றும், பெண்களை கட்சியினர் மனிதர்களாக நடத்தாததால், நான் அந்த கட்சியில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் மதுபாதுரியின் குற்றச்சாட்டை ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது. மதுபாதுரி பேசிய விவகாரம் கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானது என்றும், மற்ற உறுப்பினர்களுக்குரிய நேரத்திலும் அவர் தொடர்ந்து பேசியதால் அவரது பேச்சை முடித்துக்கொள்ள அவருக்கு அறிவுறுத்தப்பட்டபோதும் அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார் என்றும் கூறியுள்ளது.