அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் ஆதரவு. ஓங்குகிறது ஓபிஎஸ் அணி

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் ஆதரவு. ஓங்குகிறது ஓபிஎஸ் அணி

சசிகலாவுக்கு எதிரான போராட்டத்தை தன்னந்தனியாக நேற்று முன் தினம் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தொடங்கிய ஓபிஎஸ், மூன்று எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் நேற்று காணப்பட்டார். ஆனால் நாள் ஆக ஆக அவருடைய கை ஓங்கி வருகிறது.

பல முன்னணி அதிமுக தலைவர்கள் தார்மீக அடிப்படையில் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு கொடுக்க முன்வந்துள்ள நிலையில் தற்போது அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் ஓபிஎஸ் அவர்களின் இல்லத்திற்கு சென்று தனது முழு ஆதரவை வழங்கியுள்ளார். இதனால் ஓபிஎஸ் அணி வலுவாகி வருகிறது.

ஏற்கனவே நத்தம் விஸ்வநாதன், பி.எச். பாண்டியன் உள்பட ஒருசில தலைவர்கள் ஆதரவு கொடுத்துள்ள நிலையில் தற்போது அவைத்தலைவரும் ஆதரவு கொடுத்துள்ளது பெரும் திருப்பமாக கருதப்படுகிறது.

Leave a Reply