மின் கம்பம் சின்னம் தவறாக பயன்படுத்தப்படுகின்றதா? மதுசூதனன் விளக்கம்

மின் கம்பம் சின்னம் தவறாக பயன்படுத்தப்படுகின்றதா? மதுசூதனன் விளக்கம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் நடைபெறும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் மற்றும் ஓபிஎஸ் அணிகள் போட்டியிடுகின்றன. இரு அணிகளும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரியதால் அந்த சின்னம் முடக்கப்பட்டு தினகரனுக்கு தொப்பி சின்னௌம், ஓபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு ‘இரட்டை மின் கம்பம் சின்னமும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இரட்டை மின் கம்பம் சின்னத்தை இரட்டை இலை சின்னம் போன்று பயன்படுத்தப்படுவதாக தினகரன் தரப்பினர் மதுசூதனன் மீது குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து தேர்தல் கமிஷனுக்கும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுசூதனன் தரப்பினர் விளக்கமளிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதன்படி தற்போது மதுசூதனன் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மின்கம்பம் சின்னத்தை தவறாக பயன்படுத்தவில்லை என்றும், தினகரன்தான் இரட்டை இலை சின்னத்தை பரப்புரைக்கு தவறாக பயன்படுத்துவதாகவும், தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் மதுசூதனன் விளக்கம் அளித்துள்ளார்.

Leave a Reply