மத்திய பிரதேசம் மாநிலத்தில் மூன்றாவது முறையாக முதல்வர் பதவியேற்றிருக்கும் சிவாராஜ் சிங் சவுகான், நேற்று அரசு அலுவலகங்களில் முன்னறிவிப்பின்றி திடீர் ஆய்வு செய்து அரசு அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாகினார்.
முதல்வன் படத்தில் வருவது போன்று எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென அரசு அலுவலகங்களுக்கு சென்று ஆய்வு நடத்திய முதல்வர் சிவாராஜ்சிங் செளகான், போபாலில் உள்ள ஒரு அரசு அலுவலகத்தில் பணிநேரத்தில் புகைபிடித்துக்கொண்டிருந்த ஒரு அரசு ஊழியருக்கு அபராதம் விதித்தார்.
முதல்வரின் திடீர் ஆய்வு குறித்து மாவட்ட கலெக்டருக்கு கூட தெரிவிக்கவில்லை. இதனால் போபாலில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தலைமைச்செயலகம் திரும்பும் வழியில் ஒரு இடத்தில் சாலை அமைக்கப்பட்டு வரும் இடத்திற்கு சென்று சாலையின் தரம் குறித்து அவரெ தோண்டி பார்த்தார். பின்னர் சாலையின் தரம் குறித்த அறிக்கை 2 மணிநேரத்தில் தனது டேபிளுக்கு வரவேண்டும் என உத்தரவிட்டார்.