காளையை அடுத்து நாய். அடங்க மறுக்கும் பீட்டா
காளை கொடுமைப்படுத்தப்படுவதாக கூறி தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பீட்டா அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் தடை பெற்றது. இந்த தடை மாணவர்களின் எழுச்சி போராட்டத்தால் தகர்க்கப்பட்டது.
இந்நிலையில் காளையை அடுத்து நாய்க்கு ஆதரவாக பீட்டா தற்போது அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. சென்னை சைதாப்பேட்டையில் இயங்கி வந்த நாய்கள் கருத்தரிப்பு மையத்தில் நாய்கள் கொடுமைப்படுத்துவதாக கூறி பீட்டா அமைப்பு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை ஐகோர்ட் நாய்கள் கருத்தரிப்பு மையத்தை மூட உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த மேல்முறையீட்டில் நாய்கள் கருத்தரிப்பு மையத்தில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதாக தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.